திருவிடைமருதூர், ஆக. 08 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் ஆண்டு பேரவை, மற்றும் 46 ஆம் ஆண்டு நிறைவு விழா அதன் தலைவர் துரை வீரமுத்து தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், துணைத்தலைவர் ராகவன், மாநிலத் தலைவர் மாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமரவேலு, மாநில பொருளாளர் பிரகாஷ், நாகை மண்டல மாநில துணைத்தலைவர் ராஜகோபாலன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கலியமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் தஞ்சை கலியமூர்த்தி, நாகை கலியமூர்த்தி, மயிலாடுதுறை சுந்தர்ராஜன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் இச்சிறப்புமிகு விழாவில், அரசு தலைமை கொறடா கோவி செழியன், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து அவ்விழாவில் 01.04.2023 முதல் அகவிலைப்படியை 38 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், ஓய்வு பெற்ற அலுவலர்களிடம் குடும்ப பாதுகாப்பு திட்டத்திற்காக மாதந்தோறும் ரூபாய் 80 வீதம் சுத்தம் செய்து அவர்கள் இறந்தால் குடும்ப பாதுகாப்பு ரீதியாக ரூபாய் 50,000 வழங்கப்பட்டு வருகிறது.

அது தற்போது, குடும்ப பாதுகாப்பு திட்டத்திற்காக ஓய்வூதியர்களிடம் மாதம் ரூபாய் 150 விதம் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பாதுகாப்பு நிதியாக அதே 50,000 வழங்கப்படுகிறது.

ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட பேரவை தேர்தலின் போது தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரையில் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு 70 வயது நிறைவடையும் போது பத்து சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்ததை செயலாற்றும் வகையில், உரிய அரசாணை பிற்பிக்க வேண்டும் எனவும்,

மத்திய அரசு தனது ஓய்வூதியதார்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூபாய் 9000 என நிர்ணயம் செய்துள்ளதுதை போல் தமிழக அரசும் ஓய்வூதியதார்களுக்கு ரூபாய் 7850 குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை ரூபாய் 9000 உயர்த்தி வழங்க உரிய அரசாணை பிற்பிக்க வேண்டும் எனவும்,

ஓய்வூதியர்கள் இறந்தால் அவரது வாரிசுதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் படி ரூபாய் 50,000 தொகை பெறுவதில் அதிக கால தாமதம் ஏற்படுவதால் மாநில அரசு ஊழியர்களுக்கு பணியில் இருக்கும் போது இறந்தால் இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு வழங்கப்பட்டு வரும் முன்பணம் தொகை போன்று மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஓய்வூதிர்கள் இறந்த நாள் அன்று அவரது ஈம சடங்கிற்காக குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து முன்பணம் 25,000 அவரது வாரிசுதாரருக்கு வழங்க உரிய ஆணை கற்பிக்க வேண்டும் எனவும்,

ஓய்வூதியதார்களுக்கு மத்திய அரசு தனித்துறை மற்றும் அமைச்சகத்தை அமைத்துள்ளது போல், தமிழக அரசும்  ஓய்வுதாரர்களுக்கான தனித்துறை மற்றும் அமைச்சகத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் 46 ஆம் ஆண்டு நினைவு விழாவில் நிறைவேற்றப்பட்டன. இவ்விழாவில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here