தஞ்சாவூர், ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.  பெருவுடையாருக்கு நல்லெண்ணெய் திரவிய பொடி மஞ்சள் பொடி அரிசி பொடி பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பெருவுடையார், அம்பாள் உற்சவ சிலைகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரை வழிபட்டு செல்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here