பொன்னேரி, மே. 25 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும் காதொலி கருவி போன்ற மற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்குவதற்கான சிறப்புதேர்வு முகாம் நடைப்பெற்றது.
இத்தேர்வு சிறப்பு முகாமில் நூறு பெண்கள், இருநூறு ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300 – க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். மேலும் இம்முகாமினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து நடத்தினார்கள்.
தொடர்ந்து இம்முகாமில் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ்’ போட்டோ இரண்டு ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, மேற்பார்வையாளர் செந்தில் ஆனந்த், அலிம்கோ நிறுவன பெங்களூர் நிர்வாகி பிரதீஸ் சுக்லா மற்றும் மீஞ்சூர், சோழவரம், புழல் ஒன்றிய சிறப்பு ஆசிரியர் பயிற்சிநர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.