கும்பகோணம், டிச. 15 –

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பாலக்கரை எம்.எம்.ஆர் நகர் பகுதி 5 மற்றும் 6 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அத்தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்து வந்த துணை மேயர் தமிழழகன்,  சாலை மறியலில் ஈடுப்பட்ட அப்பகுதி குடியிருப்பவாசிகளிடம் குறைகளை கேட்க முற்படுகையில் அவரிடம் அப்பகுதி வாழ் மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.

எங்கள் பகுதியில் புதிதாக சாலைப் போட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு மீதி ஜல்லியை ஏன் எடுத்துச் சென்றார்கள் எனவும் மேலும் மீதிச்சாலையை இனி எப்போது போடுவீர்கள். எனவும் தொடர்ந்து எங்கள் வீதியில் பாதாளச்சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவதாகவும் அதுக்குறித்து பலமுறை புகார் அளித்தும் மாநராட்சி எவ்வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லையென அடுக்கடுக்கான கேள்விகளை அப்பகுதி மக்கள் துணை மேயரிடம் எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த துணை மேயர் தொடர்ந்து உங்கள் பகுதிகளுக்கான அனைத்து நலத்திட்ட வேலைகளையும்  செய்துக் கொண்டேதானே வருகின்றோம் எனவும், நீங்களும் அதனை நன்கு அறிவீர்கள் இருப்பினும் பிறர் சொல் பேச்சுக்கேட்டு எங்கள் செயல்திட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் செய்யும் நிலைப்பாடை எடுக்காதீர்கள் என அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து துணை மேயர் அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட  பகுதிக்கு சென்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, விரைவில் செய்து தருவதாக அவர்களிடம் உறுதியளித்து சென்றார். அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அது தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், பாலக்கரை அருகில் உள்ள எம் எம் ஆர் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும்,  இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் புதிதாக சாலை போடப்பட்டது. எனவும், இந்நிலையில் அச்சாலை பாதி வரைதான் போடப்பட்டது. இதற்கிடையில் மீதி சாலை போடுவதற்கு கொட்டப்பட்டிருந்த ஜல்லிகளை வாகனம் மூலம் திரும்ப எடுத்துச் சென்றதால்.தாங்கள் ஆத்திரமடைந்ததாகவும், அதனைக் கண்டிக்கும் வகையில் நாங்கள் கும்பகோணம் திருவையாறு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவிக்கின்றனர்.

அத்தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், மற்றும் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். பேச்சு வார்த்தைக்குப் பின்பு துணை மேயர் அளித்த உறுதி மொழியை ஏற்று சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here