இராணிப்பேட்டை, அக். 27 –

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அருகே அமைந்துள்ளது சஞ்சீவிராயன் பேட்டை இவ்வூரின் 15 வார்டுக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அப்பள்ளி வாசலை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் மேல் மூடி அமைக்காமல் திறந்த வெளியாக உள்ளது.

தொடக்கப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் குழந்தைகள் என்பதால் விளையாட்டு தனமாகவோ அல்லது தெரியாமலோ அதில் அவர்கள் தவறி விழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் ஏற்படும் பேராபத்துக்களை தவிர்த்திட அக்கால்வாய்க்கு மூடி அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமிரி பேரூராட்சி எடுக்க வேண்டும் என அவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மூத்த பாதசாரி குடிமக்களுக்கும் இது ஆபத்துக்களை விளைவிக்கும் என அவ்வூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சத்தை வெளிப் படுத்துகின்றனர். மேலும் அதில் தேங்கும் தண்ணீரில் டெங்கு போன்ற கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் அதிகம் எனவும் அதனால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என அவர்கள் கருதுகிறார்கள். எனவே திமிரி பேரூராட்சி நிர்வாகம் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அக்கால்வாய்க்கு மூடி அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அவ்வூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here