செவ்வாய் பேட்டை, ஜூலை-11,

பெருமாள் பட்டு பெரியார் தெருவைச்சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் 52 வயது மதிக்கத்தக்க ஜெயராமன்  என்பவருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றது அவருக்கு இரண்டு மகள்களும் ஒருமகனும் உள்ளனர். 29 வயதுடைய வெற்றி வேந்தன் என்ற மகன் தினக்கூழியாக வேலைப்பார்த்து வருகிறார்.  சம்பவத்தன்று அதாவது கடந்த ஞாயிறன்று ஜெயராமன் தனது வேலை நிமித்தமாக மகனின் யமகா சலூட்ட என்ற இரு சக்கரவாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது, எதிரே வீர ராகவபுரத்தைச்சேர்ந்த பதிவெண் தெரியாத பல்சர் வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையகவும் வந்த நபர் தனது மகன் ஓட்டி வந்த வாகனத்தில் மோதியதால், நிலை தடுமாறி விழுந்த தில் அவரது தலையில் பலத்தக் காயமும், உடல் முழுவதும் சிராநப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அக்கம் பக்கம் இருந்தவர்கள் 108 ஆம்புலஸில் ஏற்றி விட்ட திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் . தனது மகனை சோதித்த மருத்துவர்கள் தனது மகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஆதலால் தனது இறந்த தனது மகனின் உடலை உடல் கூறு பரிசோதனை செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here