பொன்னேரி, ஜூலை. 07 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலத்தின் உள் நுழைந்து பெரிய காவனம். சின்ன காவலன். கூடுவாஞ்சேரி. பறிக்கப்பட்டு. உப்பளம். மெத்தூர் வழியாக பழவேற்காடு வரை செல்வதற்கு உண்டான போக்குவரத்து இப்பகுதியில் நடைபெறுவது வழக்கம். பொன்னேரி நடு பஜாருக்கு வர வேண்டும் என்றால் ரயில்வே மேம்பாலத்தை கடந்து தான் வரவேண்டும்.

பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், மருத்துவ வசதி தேவைகளுக்கு. பாலத்தைக் கடந்து தான் வரவேண்டும். மேம்பாலம் அமைக்கப்பட்ட காலத்தில் குறைந்த அளவு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வாகனங்களும் அதிகப்படியாக உருவெடுத்ததினால்  காலையிலும். மாலையிலும். அடிக்கடி இப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு. வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பாதிப்பாக உள்ளது.

இதனால் இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழிவகுத்தால் வாகன நெரிசலில் இருந்து மீள முடியும் என்று அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சிறிது மழை அடித்தாலே போதும் பாலத்தின் கீழ் தண்ணீர் நிரம்பி அதிக அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி விடுகிறது அந்நேரங்களில் மருத்துவ வசதிக்கு செல்லும் நோயாளிகளை கூட காத்திருக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதனை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு சரி செய்து தரும்படி கோரிக்கை வைக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here