செங்கல்பட்டு, ஏப். 15 –

தேசிய உள்கட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதனை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் பயணிகளிடம் இல்லங்களில் தீ விபத்து ஏற்படாதவாறு எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அவ்விபத்துகளில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளவது உள்ளிட்ட பொருள் குறித்த வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை வழங்கி அத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் இல்லங்களில் சமையல் அறைக்கான கூரை அமைப்பு தாழ்வாகயிருத்தல் கூடாது, மேலும் சமையல் செய்யும் போது மகளிர் காட்டன் துணிகளை மட்டுமே உடுத்துதல் வேண்டும், மேலும் அப்போது எண்ணெய் மற்றும் மின்சாரத்தினால் ஏற்படும் தீ விபத்தின் போது, தண்ணீரை பயன்படுத்தக்கூடாது, மேலும், சமையல் அறையில் குழைந்தைகளை விளையாட அனுமதிக்ககூடாது, சிம்னி இல்லா விளக்குகளை உபயோகிக்ககூடாது, தீ விபத்து ஏற்பட்டால் முதலில் உயிரை காபாற்றிக் கொண்டு பிறகு தொடர்ந்து உடமையை காப்பாற்ற முயல வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை செங்கல்பட்டு தீயணைப்புத் துறை காவலர்கள் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here