கும்பகோணம், ஜூலை. 02 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ அம்பிகை திரெளபதி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 20, ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் அரசு கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், மற்றும் சூரியனார் கோவில் ஆதினம் ஆகியோர் இவ்விழவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

மேலும் இவ்விழாவிற்காக பல மாதங்களாக நடைபெற்ற கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 25 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, சங்கல்பத்துடன் தொடங்கியது.28 யாகசாலை பூஜை கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, கடந்த 26 ஆம் தேதியன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹ_தி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, துவாதசி திதி, விசாக நட்சத்திரம், சிம்ம லக்னத்தில், சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் ஜெபிக்க, அதனைத் தொடர்ந்து புனித நீரினால் அக்கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்வித்து, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சூரியனார் கோவில் ஆதினம் உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கற்றனர். முன்தாக அவர்களுக்கு அக்கோவில் திருப்பணிக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில்  கும்ப மரியாதை வழங்கப்பட்டு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்களும் இவ்விழாவில் பங்கேற்ற திரளான பொது மக்களும் மனம் மகிழ சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சுவாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here