கும்பகோணம், மார்ச். 28 –
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் திருக்கோயில் கோயில் வேங்கடாசலபதிசுவாமி பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 9ம் நாளான இன்று திருவோணத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தும் தேரில் உலா வந்த பொன்னப்பர் பூமிதேவி தாயாரையும் வழிபட்டு மகிழ்ந்தனர்.
இத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி பிரமோற்சவம் 12 தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா உற்சவர் பெருமாள் பொன்னப்பர், பூமிதேவி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடி மரத்திற்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், தற்காலிக கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது,
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான இன்று 28ம் தேதி திங்கட்கிழமை திருவோணத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்,
தொடர்ந்து கோயில் புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது பின்னர் 12ம் நாளான 31ம் தேதி வியாழக்கிழமை மூலவர் சன்னதியில் நண்பகல் அன்னப்பெரும்படையலும் மாலை புஷ்பயாகமும், நடைபெற்று விடையாற்றி திருவீதியுலாவுடன் இவ்வாண்டிற்காண பங்குனி பிரமோற்சவம் பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.