கும்பகோணம், ஏப். 07-

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் அப்துல் ரசாக் (வயது 63) இவர் வெளிநாட்டில் இருந்து விட்டு அதன் பிறகு ஊருக்கு திரும்பி வந்து ராஜகிரியில் கைலி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு நான்கு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். ஒரு மகனைத் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மகள் ஹதிஜா பிவி கும்பகோணம் மாநகராட்சியில் திமுகவின் 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

அப்துல் ரஜாக் வழக்கம்போல் ராஜகிரியில் கடை வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். மறுநாள் காலையில் வெகு நேரம் ஆகியும் ராஜகிரியில் கடை திறக்காததால் அங்குள்ளவர்கள் அப்துல் ரசாக்கின் மகனுக்கு தகவல் தெரியப்படுத்தி உள்ளனர். உடனடியாக அவரது மகன் முகமது ஆரிப் தந்தை வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது  கதவை உடைக்கப்பட்டுள்ளதையும் தந்தை காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.

இதுக்குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் உடன் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  அய்யம்பேட்டை ஆய்வாளர் வனிதா, மற்றும் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தினைப் பார்வையிட்டு  உடலைக் கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் ரவிப்பிரியா கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர் ஹேமா தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய் டப்பி கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்றது. இதுகுறித்து ரெகுநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here