திருவாரூர், மே. 02 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் குடவாசல் பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என கோரிக்கை மனு அளித்தார்.

நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதியில் அமைந்துள்ள அரசு கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என திருவாரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில்  டாக்டர். எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி கடந்த அதிமுக ஆட்சியில் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல்  பகுதி ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது அந்த கல்லூரி குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதியில் இயங்கி வரும் நிலையில், கல்லூரியை குடவாசல் பகுதியிலிருந்து வேறு  பகுதியில் அமைக்க போவதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நன்னிலம் தொகுதி சட்டமன்ற  உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ், குறிப்பிட்ட கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் குடவாசல் பகுதியிலேயே அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினார். அதனை தொடர்ந்து இது குறித்து, இன்று முன்னாள் அமைச்சர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ், ‘குடவாசல் பகுதியிலிருக்கும் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றாமல் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று குடவாசல் பகுதியிலேயே அமைய வேண்டும். எனக் கூறினார். இந்த நிகழ்வில் குடவாசல் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

பேட்டி:ஆர். காமராஜ், (முன்னாள் அமைச்சர்).

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here