கும்பகோணம், மே. 03 –

கும்பகோணம் கீழகொட்டையூர் வாணியத் தெருவில் உள்ள பாலமாரியம்மன் திருக்கோவில் 112 ஆம் ஆண்டு சித்திரை மாத  திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டப் பக்தர்கள் சக்திக்கரகம்  பால்குடம்  அலகுக்காவடி எடுத்து வந்து விழாவில் பங்கேற்றனர்.

இத்திருவிழா தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு நடைப்பெறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 24ம் தேதி கணபதி ஹோமம் பூச்செரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி  முக்கிய நிகழ்ச்சியான இன்று காவிரி ஆற்றிலிருந்து சக்திவேல் சக்தி கரகம் அக்னிசட்டி பால்குடம் காவடி அலகு காவடி புறப்பட்டு முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

இன்று  காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பால மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மதியம் நடந்த சிறப்பு  அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாலை  அக்னி பிரவேசம் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு           (பூக்குழியிறங்கினர்) தீ மிதித்தனர். அதனைத் தொடர்ந்து புஷ்பப் பல்லக்கில் கால மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. நாளை  கஞ்சி வார்த்தல் மஞ்சள் நீராட்டு விளையாட்டு வருகிற 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியுடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவு பெறுகிறது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நாட்டாமைகள் தெருவாசிகள் கிராமத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here