கும்பகோணம், மார்ச். 20 –
கும்பகோணம் அருகே குறிச்சியில், கலைஞரின், வரும் முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார், இந் நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகேயுள்ள ஆரலூர் கிராமத்தில் இன்று, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் அரசினர் உயர்நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது,
இதனை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசும் போது, தமிழக அளவில் இதுவரை இத்திட்டத்தின் வாயிலாக ஏழை, எளியோா் பயன்பெறும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றாா். இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்றுள்ளனர் என்று, தெரிவித்தார்.
இம்முகாமில் சித்தா, மகப்பேறு, நரம்பியல், சிறுநீரகவியல், காது மூக்கு தொண்டை, பல் சிகிச்சை, தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி, எலும்பு முறிவு, உயர் மற்று குறை இரத்தஅழுத்தம், இரத்த பரிசோதனை, பிசியோ சிகிச்சை, இசிஜி, பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமாக நோய்களுக்கும் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையுடன், அதற்கான மருத்து மாத்திரைகளும் தேவையானவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருப்பனந்தாள் ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் கோ.க அண்ணாதுரை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலகுரு ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு, குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கணேசன் ஊராட்சி செயலர் பூமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.