சுவாமிமலை, மார்ச். 11 –

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் பாசமலர் எனும் மண்டபத்தில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம்  தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இம்முகாமில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா, பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத் தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமில்  பொதுமக்களின் வருகை பதிவு செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை, எலும்பு முறிவு மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய் பரிசோதனைகளும், ஆய்வகப் பரிசோதனைகளும் நடைப்பெற்றது.

மேலும், இம்முகாமில் சத்தான உணவுகளை சாப்பிடும் முறை குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சத்துமாவு பாயசம், எள் உருண்டை, கொழுக்கட்டை, சத்துமாவு உருண்டை, கபசுரக் குடிநீா் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

மேலும் இம்முகாமில் பல்வேறுமருத்துவப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். சித்த மருத்துவம், காசநோய் தடுப்பு, எய்ட்ஸ் கட்டுப்பாடு, யானைக்கால் நோய் தடுப்பு, டெங்கு தடுப்பு என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில்  பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர். மருத்துவ முகாமில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு

ஒரு கிலோ பேரிச்சம்பழம், சத்து மாவு, தலா அரை கிலோ ஆவின் நெய், புரதச்சத்து பிஸ்கட், 200 மி.லி., இரும்பு சத்து டானிக் உள்ளிட்டவை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here