திருவள்ளூர், மே. 20 –

மலேசியாவில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக்கொண்ட 7 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச அளவிலான கராத்தா போட்டி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்குப் பெற்றனர்.

மேலும் அப்போட்டியில் 4 தங்கம், 4 வெள்ளி, மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்றுக் குவித்து அவர்கள் அனைவரும் நேற்று தாயகம் திரும்பினார்கள். அவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடியில் இயங்கி வரும் சேப்பா அகாடமி மற்றும் நியூ எங் சோடா கான் கராத்தே டு பவுண்டேஷன் இணைந்து கோடைகால பயிற்சியாக கராத்தே, சிலம்பம் போன்ற விளையாட்டு அப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பயிற்சி வகுப்பில் தேர்வுப்பெற்ற சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் கராத்தே மாஸ்டர் ராஜா மற்றும் சங்கீதா தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற தகுதி சான்றுகளை பெற்றனர்.

இந்த நிலையில் கோடை கால சிறப்பு முகம் முடிந்த நிலையில் மலேசியாவில், மலேசியா உட்பட தாய்லாந்து, இந்தோடேசியா, ஸ்ரீலங்கா, ஜப்பான், கொரியா, போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த 7 வயதிற்கு மேற்பட்ட மாற்றும் 60 வயதிற்குட்பட்ட காரத்தே வீரர்கள் பங்கேற்ற சர்வதேச கராத்தே போட்டி தனித்தனி பிரிவுகளின் கீழ் நடைப்பெற்றது.

இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று அப்போட்டிகளில் வெற்றிப்பெற்று 4  தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கல பதக்கம் வென்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். தாயகம் திரும்பிய அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் மாநில அரசுக்கு கராத்தே பயிற்சியாளர் சங்கீதா ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.அக்கோரிக்கை குறித்து அவர் தெரிவிக்கையில்,

மத்திய அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் தற்காப்பு கலை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அதற்கான வாய்ப்புகளை மாணவ மாணவியர்களுக்கு எங்கள் பயிற்சி நிறுவனம் செய்து வருவதாகவும், அதற்கு அரசு தகுந்த அங்கீகாரம் அளித்திட வேண்டும் எனவும், மேலும், மாநில அரசு தற்காப்பு கலை கற்றுக் கொள்ளும் ஆண் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், அப்பயிற்சி பெற்ற அம் மாணவ மாணவியர்களுக்கு நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தினால் மென்மேலும் அவர்கள் இத்தாற்காப்பு கலைப்பயிற்சியில் மேன்மையடைந்து எதிர் வரயிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று மாநில அரசுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here