கும்பகோணம், ஜன. 02 –
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி தெப்போற்சவ விழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து, கடந்த 26 ஆம் தேதி கொடியத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாளான வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று, பெருமாள் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து பரமபத வாசனை கடந்து வந்தும், பிரகார உலா வந்த பெருமாளை தரிசனம் செய்தனர். கோவில் கொடிமரம் அருகே பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 29 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து நாளை, 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வசந்த மண்டபத்தில் தெப்போற்சவம் பெருமாள் தாயாருடன் எழுந்தருள்வார். மேலும், 10 ஆம் நாளான 4ம் தேதி புதன்கிழமை சப்தாவர்ணமும், நிறைவாக 11ம் நாளான, 5ம் தேதி வியாழக்கிழமை விடையாற்றியுடன் இவ்வாண்டிற்கான மார்கழி தெப்போற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.