ஓசூர், பிப்ரவரி. 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ….

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது.

இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10 கோடி 40 இலட்சம் மதிப்பில் அப்பணிக்களுக்கான ஆரம்பக் கட்ட துவக்க விழா நடைப்பெற்றது.

அந்நிகழ்வில் பங்கேற்ற தளி சட்டமன்ற உறுப்பினர் இராமசந்திரன் அடிக்கல் எடுத்து கொடுத்து அப்பணி வெகுச்சிறப்பாகவும் விரைவாகவும் மேற்கொண்டிட அனைவருக்கும் தமது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் ரூ. 10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடங்கின அதில் அனுசோனை – பாலேகுளி சாலையில் காலேப்பள்ளி கிராமத்தில் ரூ.2.60 கோடி மதிப்பில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல்.

தேன்கனிக்கோட்டை , மதகொண்டப்பள்ளி சாலையில் பேளூர் கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல்.

அந்தேவனப்பள்ளி – சாலிவாரம் சாலை ராமச்சந்திரம் வழியில் கொங்குசெட்டிப்பள்ளி கிராமம் அருகில் ரூ.3 கோடி 10 இலட்சம் மதிப்பில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல்.

அந்தேவனப்பள்ளி – சாலிவாரம் சாலை ராமச்சந்திரம் வழியில் வெங்கடாபுரம் கிராமம் அருகில் ரூ.1 கோடி 20 இலட்சம் மதிப்பில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல்.

தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி – நாட்றாம்பாளையம் சாலையை ரூ.5 கோடி 50 இலட்சம் மதிப்பில் இருவழி பாதையாக அகலப்படுத்தும் பணி ஆகிய பணிகள் உள்ளிட்ட பணிகளாகும்.

இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் உடன் உதவி பொறியாளர் நெடுஞ்சாலை துறை, மாவட்ட கவுன்சிலர்கள் பூதட்டியப்பா, பழனி, ஒப்பந்ததாரர் சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராம் முன்னாள் கவுன்சிலர் வீரப்பா டெக்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் சரி  .ஜெயந்த் .ராமன். தளி ஒன்றியம் முன்னாள் துணைச் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here