பழவேற்காடு, ஆக. 04 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு அப்பணியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வைரவன் குப்பம் கூட்டுறவு சங்க தலைவர் ஞானமூர்த்தி, பழவேற்காடு வார்டு உறுப்பினர் ஹாரூன் மற்றும் மகளிர் குழுவினர் பலர் அப்பகுதி முழுவதும் பனை விதை நடும் பணியில் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வின் நிறைவில், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளின் சார்பில் இப் பனை விதைகளை நடும் பணியினை அக்கிராமத்தில் உள்ள ஏரி குளங்களின் கரையோரங்களில் தொடர்ந்தால், அக்கரையினை வழுப்படுத்தவும் மற்றும் நீராதாரத்தை பேணிக் காக்கவும் வழி வகுக்கும் என்றனர்.
மேலும் அப்பனை மரத்தால் கிடைக்கும் முலப் பொருளினால் பனைப்பழம், மற்றும் பனை ஓலை, பனைக்கிழங்கு, மற்றும் பனை வெல்லாம், பதனி, பனைக் கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி செய்து, அதன் மூலம் அப்பகுதிகளில் குடிசைத் தொழில்கள் தொடங்கவும் மேலும் அக் கிராமம் பொருளாதார வளர்ச்சியடையவும் வாய்ப்புள்ளதாக அந்நிகழ்வில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் அவ்வொன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.