காஞ்சிபுரம், டிச. 21 –

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு பலதரப்பட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ரூபாய் 35 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையப் பிரிவை ஹூண்டாய் மோட்டர் இந்தியா ஃபவுண்டேஷன்  நிறுவனத்தின் சார்பில் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிமிடத்திற்க்கு 50 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலை இந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இம்மருத்துவமனையில் உள்ள சுமார் 13 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளுக்கான ஆக்சிஜன் தேவையை இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் பூர்த்தி செய்யும் கொரோனா உள்ளிட்ட பிற பாதிப்புகள் உள்ள நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைக்கும் உதவியாக இருக்கும். இந்நிகழ்ச்சியில் ஹூண்டாய் நிறுவன அறங்காவலர் கணேஷ் மணி கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here