கும்மிடிப்பூண்டி, மார்ச். 19 –

கும்மிடிப்பூண்டியில், 9 வயது பள்ளிச்சிறுமி யோகாசனங்களில் மிகவும் கடினமான அந்தர் முகசகுனி கபடாசனத்தை பத்து நிமிடங்கள் தொடர்ந்து கண்ணாடிப் பெட்டிக்குள் செய்து தனியார் பள்ளி மாணவி நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மணிகண்டன் மற்றும் கல்பனா இருவரும் தம்பதியர். இவர்களது மகள் எம் .கே .லத்திகாஸ்ரீ வயது 9 இவர் எலைட் வேர்ல்டு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மூன்று வயது முதலே யோகாவின் மீது நாட்டம் கொண்டதால், இச்சிறுமி தென்னிந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளிலும், மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்.

இந்நிலையில் இன்று எலைட் வேர்ல்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உலக சாதனை முயற்சியில் கண்ணாடிப் பெட்டிக்குள் அந்தர் முகசகுனி கபடாசனத்தை பத்து நிமிடங்கள் தொடர்ந்து செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதனால் உலக சாதனை படைத்த லத்திகாஸ்ரீ மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த காளத்தீஷ்வரரன், அர்ச்சனா, வித்யா.மற்றும் சங்கீதா. ஆகியோரை பள்ளி நிர்வாகமும், அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here