ஆவடி, மே. 14 –

திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள சாலையில் கீழேக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை நண்பர்கள் இருவர் திருமுல்லைவாயல் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களின் செயலைப் பாராட்டும் விதமாக ஆவடி ஆணையர் அவர்களை அழைத்து இன்று பாராட்டிவுள்ளார்.

திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் வ.ஊ.சி தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் என்பவரின் மகன் தனசேகர் வயது 20 இவர் பால் மாடு வளர்த்து வருபவர் மேலும் அதன் மூலம் பால் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் தினந்தோறும் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வெளியில் அனுப்பி வைத்து மாலை மாடுகளை வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம் இந்நிலையில் நேற்று வெகு நேராமாகியும் வீட்டிற்கு திரும்பாத மாடைத்தேடி மே.13 நள்ளிரவு ஒரு மணியளவில் இவரும் நண்பர் சூரியகுமார் இருவரும் அப்பகுதியில் மாட்டைத்தேடி சென்றுள்ளனர். அப்போது சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து பார்த்த போது அதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்ததைக் கண்டுள்ளனர். அதனை அவ்வழியாக இரவுநேர ரோந்து பணி வாகனத்தில் வந்த வந்த டி.10 காவல்நிலைய உதவி ஆய்வாளர் நேருவிடம் நடந்த தகவல்களை தெரிவித்து ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அதேப்பகுதியில் சரஸ்வதி நகர் 11 வது தெருவில் வசிக்கும் சசிகுமார் (30) கன்னடபாளையம் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (68) என்பவரும் ரியல் எஸ்டேட்  வேலை செய்து வருவதாகவும் நேற்று மே 13 -2022  தேதியன்று இரவு 21.00 மணிக்கு  சசிகுமார் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு  அவருடைய TVS XL  வாகனத்தில் டேங்க் கவரில் வைத்து கொண்டு வீட்டிற்கு வந்து வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டு பணத்தை எடுக்காமல் வீட்டினுள் சென்று படுத்து உறங்கி விட்டதாகவும் டேங்க் கவரில் இருந்த பணத்தை தெருநாய்கள் கடித்து இழுத்து தெருவில் வீசி விட்டதாகவும் அருகில் வசிக்கும் தனசேகர் (20) என்பவர் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து  ஆவடி காவல் ஆணையர் இன்று பணத்தை இழந்த சசிகுமாரையும் பணத்தை உதவி ஆய்வாளர் நேருவிடம் ஒப்படைத்த தனசேகர் மற்றும் சூரியகுமார் ஆகியோரை அலுவலகம் அழைத்து பணத்துக்கு சொந்தக்காரரிடம் பணத்தை ஒப்படைத்தும், நண்பர்கள் இருவரின் செயல்களை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here