தஞ்சாவூர், மார்ச். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகர் பகுதிகளில் மிகவும் பிரபலமாக விளங்கி வரும் அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பச்சைக்காளி மற்றும் பவளக்காளி அம்மனின் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அத்திருத்தலம் விஜயாலய சோழனால்  கட்டப்பட்டு சோழர், திருமலை நாயக்கர் மற்றும் மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றிப் பாதுகாக்கப் பட்டதும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களில் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கோடியம்மன் ஆலயம் தஞ்சாவூரில் எல்லைப் பகுதியில் உள்ளது.

மேலும் அவ்வாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது, மகாவிஷ்ணு அம்சமான பச்சை காளியும் சிவபெருமானின் அம்சமான பவளக்காளியும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி காளியாட்டம் ஆடும் நிகழ்ச்சி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதைப்போல் இந்தாண்டு பச்சைக்காளி பவளக்காளி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது, காளி அம்மன்களையும் அழைத்து வந்து இரண்டு காளியம்மன்களும் வழங்கிய திருநீர் நிரப்பிய தனித்தனி கபாலங்களை பெற்று பக்தர்களுக்கு தலையில் திருநீறு பூசிவிட்டு இரண்டு காளியம்மன் களையும் ஆசி வழங்க செய்வார்கள்.

பச்சைக்காளி அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயிலில் இருந்தும் பவளக்காளி அருள்மிகு கொங்கனேஸ்வரர் திருக்கோயிலில் இருந்தும் புறப்பட்டு நகர்வலம் வந்து வீடு வீடாக சென்று மக்களுக்கு ஆசி வழங்கியது,

அதனைத் தொடர்ந்து மேலவீதியில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதனைக் காண ஏராளமானோர் அப்பகுதிக்கு திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெற்று வரும் அச்சிறப்பு மிகு பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா வெகுக் கோலாகலமாக நடைப்பெற்றது. மேலும் இரண்டு காளிகளும் வீடுதோறும் சென்று பக்தர்களின் பூஜையை ஏற்றுக் கொண்டார்கள்.

விஜயாலய சோழனால்  கட்டப்பட்டு சோழர் நாயக்கர் மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டதும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களில் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கோடியம்மன் ஆலயம் தஞ்சை மாநகர எல்லைப் பகுதியில் அமைந்து உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here