ஓசூர், பிப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி செய்தியாளர் கருமலை தம்பி

ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது போல எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு சிலைகளை வைக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை எழுப்பினர். அப்போது திமுக அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று மேயர் சத்யா தலைமையில், ஆணையாளர் சினேகா துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது.

மாமன்ற கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அப்போது ஓசூர் மாநகராட்சி 45 ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் கலாவதி சந்திரன், தன்னுடைய வார்டு பகுதியில் தனக்கு தெரியாமல் அதிகாரிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவும் அதனால் அவ்வார்டு மக்கள் தன்னை கேள்வி கேட்கின்றனர் என்றார். மேலும் அதிகாரிகளை கண்டித்து திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

மேலும் இன்று நடைப்பெற்ற மாமன்ற கூட்டத்தில் மொத்தம் 82 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஓசூர் மாநகராட்சி தளி சாலை பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், ஓசூர் மாநகராட்சி வளாகத்தில் திருவள்ளுவருக்கும் சிலைகளை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானம் தொடர்பான விவாதத்தை எழுப்பிய அதிமுக கவுன்சிலர்கள், கலைஞர் திருவள்ளுவர் ஆகியோருக்கு சிலைகளை வைப்பது போல ஓசூர் மாநகராட்சி பகுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு சிலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவ்விரு கட்சி கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளை வைக்க மேயரிடம் அனுமதி கேட்கிறோம், அவர் இது சம்பந்தமாக அவர் பேசட்டும் நீங்கள் பேசக்கூடாது என திமுக கவுன்சிலர்களை அதிமுக கவுன்சிலர்கள், அதிமுக மாமன்ற மண்டல குழு தலைவர்கள்  ஜெயபிரகாஷ், புருஷோத்தமரட்டி, நிலைக்குழு தலைவர்கள் அசோகா ரெட்டி, ஸ்ரீதர்,  கவுன்சிலர்கள் சங்கர், மஞ்சு சிவராமன் ரஜினி, கிருஷ்ணவேணி ராஜி, லட்சுமி ஹேமகுமார், தில்சத் ரகுமான், புஷ்பா வரதராஜ், முருகம்மாள் மதன்,ஆகியோர் இடை மறித்து பேசினார்கள். அதனால் மேலும் நீண்ட நேரம் இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்கு வாதத்தால் அங்கு கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here