திருவாரூர், ஆக. 09 –

அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்காகவும், மேலும் விலையினை குறைப்பதற்காகவும், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்துள்ளது. இருப்பினும் அதில் பச்சரசிக்கு மட்டுமே அத்தடையினை விதித்து இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரிசி அரவை ஆலை சங்கத்தின் உறுப்பினர் முகமது திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அதுக்குறித்து அவர் தெரிவிக்கும் போது, மத்திய அரசு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது குறிப்பிடத் தக்கதெனவும், ஆனால் மத்திய அரசு பச்சரிசியை மட்டும் தடை செய்துள்ளது எனவும், மேலும் தமிழ்நாடு கேரளா பாண்டிச்சேரி மேற்கு வங்காளம் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய புழுங்கல் அரிசியை அதாவது அவித்த அரிசியை தடை செய்யாததால் அரிசியின் விலை தற்போது பத்திலிருந்து,  15 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், மேலும் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்காத பட்சத்தில் அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், இதனால் தனியார் கடைகளில் அரிசி வாங்கும் ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு ரைஸ் மில்  அசோசியேசன் உறுப்பினர் முகமது பேட்டியளித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், நாடு முழுவதும் ஒரு கோடியே 2 லட்சம் டன் புழுங்கல்  அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், மேலும் 60 லட்சம் டன் பச்சரிசி 50  லட்சம் டன் பாசுமதி அரிசி எனவும் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 12 லட்சம் டன் அரிசி ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

எனவே புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்காவிட்டால், மேலும் தற்பொழுது காவேரி டெல்டா பகுதிகளில் விளைச்சல் குறையும் என்பதால் அரிசி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் இதுக்குறித்து தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது தெரிவித்தார்.

மேலும் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தால்,  அரிசி  விலை 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் குறையும் எனவும், அதனால் பொதுமக்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here