Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முகப்பு எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

“தம்பட்டம்” தமிழ் நாளேடு இது எங்கள் எடிட்டரின் இளம் பருவத்தின் கனவு என்றே சொல்லலாம் . ஆம் தனது சிறுவயதிலயே பத்திரிக்கை துறையின் மீதான நாட்டமே அவரை இத்துறைக்கு அழைத்து வந்தது, செய்தியாளர்களின் செய்தி சேமிப்பதில் உள்ள இலாவகம், பத்திரிக்கையாளனின் சமூக பொறுப்பு, செய்தியை தருவது மட்டுமல்லாது சமூகத்தில் நடைப் பெறும் அவலங்கள் குறித்த தனது கருத்தை பதிவிடு செய்வது, மேலும் பல்வேறு துறைகள் சம்பந்தமாக கட்டுரைகள் எழுதுவதென தனது பங்களிப்பை இச்சமூகத்திற்கு அளித்திட வேண்டும் என்ற பெரும் ஆவலே அவரை மேலும் துறைக்குள் வர உந்துதலாய் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை, அதன் காரணமாக எங்கள் ஆசிரியரான திரு. இரா. ஹரிகரசுதன் அவர்கள் தனது முதுகலை பட்டப் படிப்பை முடித்த பின், தனது சிறுவயது கனவுகளை வெளிப்படுத்தும் விதமாக 2015 ஆம் ஆண்டு தம்பட்டம் என்ற தமிழ் நாளேட்டினை திருவள்ளூர் மாவட்ட பதிப்பாக தனது முதல் பதிப்பை துவங்கினார். அதில் பல்வேறு தரப்பு செய்திகளையும் உண்மை தன்மை மாறாமலும், செய்தி துறைக்கே உரிய விதிகள் (ethics) அறிந்தும் பல்வேறு செய்திகளை தனது நாளேட்டின் வாயிலாக மக்களுக்கு வழங்கி வருவதை பெருமையாகவும், தனது கடமையாகவும் செய்து வருகிறார். அச் சிறப்பினை ஆதரித்து, பெரும் பான்மையான மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தற்போது எங்கள் நாளேடு, மூன்றாம் ஆண்டை தாண்டி நான்காம் ஆண்டில் தனது பயணத்தோடு, thampattam.in என்ற இணைய தளம் வழியாக தனது அடுத்த கட்டச் சேவையை தொடங்கும் நிலைக்கு உயர்ந்து வந்துள்ளது என்றால் அது பெரும்பான்மையான மக்கள் எங்களுக்கு தந்த ஆதரவும், நம்பிக்கை யுமே அதற்கு சாத்தியம் என்பதை நாங்கள் அறிவதோடு. உணர்கின்றோம். மேலும், எங்களுக்கே உரிய தனித்துவம் கொண்ட அனைத்து வகையான செய்தி தகவல்களை எங்கள் பார்வையின் வாயிலாக உங்களுக்கு எங்கள் கருத்துக்களோடு உண்மையை வெளியிடுகிறோம். எப்பவும் போல் இப்பவும் எங்களை ஊக்கப் படுத்தி தங்கள் பேராதரவை நல்கிட வேண்டுமாய் கேட்டுக் கொண்டு எங்கள் பணியை உங்கள் துணையோடு தொடர்கின்றோம் எங்கள் பெரும் உழைப்பை மூலதானமாகவும், சிறு பொருளை பின்புலமாக கொண்டும் பல்வேறு தடைகளையும், சறுக்கல் களையும் தாண்டி வந்த எமது தம்பட்டம் நாளேடு குழு, அடுத்தடுத்த இலக்குகளை சென்றடைய உங்கள் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு, எங்கள் நாளேட்டின் செய்திகள் எந்நாளும் உண்மை நிலை விலகாது அடுத்த இலக்கை நோக்கி மக்களுக்கு பயன்படும் வகையில் புதுப்புது தகவல் பகுதிகளை தர மனதில் திடம் கொண்டு நல் வழியில் பயணிக்கிறது. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.