தஞ்சாவூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி நடைப்பெற்றது அதில் நூற்றுக்கும் மேற்றபட்ட மகளிர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மகளிர்க்கான முதல் ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது, அப்போட்டியினை மாநகராட்சி மேயர் இராமநாதன், கராத்தே கழக செயலாளர் முனுசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் மகளிர்க்காக நடத்தப்பட்ட அப்போட்டியில் பள்ளி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அப்போட்டியில், கட்டா, குமித்தே ஆகிய 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்களது விளையாட்டுத் துறை மீதான தனித் திறனை வெளிக்காட்டினர்.
தொடர்ந்து அப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் கராத்தே வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளானவர்கள் பங்கேற்று அந் நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்து வெற்றிப் பெற செய்தனர்.





















