மயிலாடுதுறை, மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை அருகேவுள்ள மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் ஆலயத்திற்கு பால்குடம் எடுத்து வந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாடு முழுவதும் சிவராத்திரி இன்று வழக்கமான பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பட்டலில் அமைந்துள்ள பழமையான ஆலந்துறையப்பர் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு அருகில் உள்ள நர்த்தன விநாயகர் ஆலயத்தில் இருந்து சிவ வாத்தியங்கள் முழங்க, பால்குட ஊர்வலம் துவங்கியது அதில் பள்ளி சிறுவர் சிறுமியர் சிலம்பாட்டம் ஆடி வர, குதுகலத்துடன் குதிரை யானை முன்னே செல்ல, சுவாமி மற்றும் அம்பாள் சர்வ அலங்காரத்தில் வீதி உலாவாக எழுந்தருளினர்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்தனர் ஊர்வலத்தில் அழகு காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் துவங்கி நாளை காலை வரை சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.






















