தஞ்சாவூர், மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.
அத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறும். அதுபோல் இன்று சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு 10, 12, 2, 4 நான்கு மணி என நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது.
மேலும் இன்று பிரதோஷமும் சேர்ந்து வருவதால் அதிக அளவில் பக்தர்களின் வருகையும் அதிகளவில் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.






















