திருவள்ளூர், பிப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 164 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள மீன் ஏலக்கூடம் அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் அவ்விழா திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத் தலைவர் எத்திராஜ் தலைமையிலும், கௌரவ தலைவர்கள் பி.எம்.துரைராஜ், லட்சுமணன், பொதுச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. தொடர்ந்து ஒவ்வொருவரும் சிங்காரவேலரின் சிறப்புகள் குறித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் அந்நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் எஸ்தாகி, தேசிங்கு, முகன், லோகேஷ், மணிவண்ணன், பரத், ஜெகன், சசி, குப்பன், முகம்மது  உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, லைட்ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட திருமலை நகர் கிராமத்தில் உள்ள சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் திரு உருவ சிலைக்கு கிராம நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here