திருவாரூர், டிச. 28 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய வாரியாக தங்கள் குறைகளை விவசாயிகள் அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது அதில் பேசிய விவசாயி ஒருவர் தற்பொழுது இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் எனவும், ஆனால் தாங்கள் செயற்கை உரமான டிஏபி யூரியாவிற்கு ஊக்குவிப்பதாக தனது கருத்தினை பதிவு செய்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ செயற்கை உரமான டிஏபி யூரியாவை விவசாயிகள் அதிகமாக பயன்படுத்துங்கள் என்று நான் யாரையும் வலியுறுத்த வில்லை என அப்போது அவ் விசாயிக்கு பதிலளித்தார். மேலும் விவசாயிகள் அனைவரும் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் விவசாயிகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்துகிறேன் என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர். அக்கூட்டத்தில் பங்கேற்ற பேரளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்து விட்டு வந்து பேட்டியளித்தார்.
பேட்டி: பாலகுமாரன் விவசாய சங்க செயற்குழு உறுப்பினர்