திருவாரூர், நவ. 25 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பண்டித சோழநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இந்நிலையில் அவர் வீட்டுக்கு அருகில் ஒருவர் இறந்துள்ளார் அவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல தென்னை மரத்தில் ஏறி பச்சை மட்டை மட்டும் குருத்து ஓலையை வெட்டும் பொழுது வெட்டப்பட்ட பச்சை மட்டையும் குருத்து ஓலையும் அருகில் சென்று கொண்டிருந்த எச்டி லைனில் விழுந்து அதன் மூலம் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இறப்பு நிகழ்வுக்கு சென்ற நபர் இறந்த நிகழ்வு அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.