பொன்னேரி, மே. 19 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு ஊராட்சி மற்றும் மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பின் சார்பில் தையல் இயந்திரம் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள முருகன் திருக்கோவிலின் எதிரே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி. ராஜேஷ் தலைமையிலும், துணைத்தலைவர் வி. தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ், ஊராட்சி செயலர் டி,முத்து, மகளிர் சுய உதவிக் குழுத் தலைவர் கஸ்தூரி, செயலாளர் ஹேமாவதி, பொருளாளர் சித்ரா, உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
மேலும், தமிழக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் அப்பகுதி பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து 12 நபர்களுக்கு தையல் இயந்திரத்தை வழங்கினார்கள். :தொடர்ந்து, கெவின் இண்டஸ்ட்ரியல் நிறுவன அதிகாரிகளும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பயிற்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அக்கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள். இந் நிகழ்ச்சியில் திரளான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.