திருவாரூர், ஏப். 23 –

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூரில்  மாவட்டச் செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் MLA அறிவுறுத்தலின்படி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

மேலும் அக்கூட்டத்தினை கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய திமுகச் செயலாளர் ஆர்.பாலச்சந்தர் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் கொரடாச்சேரி பேரூர் திமுக செயலாளர் பூண்டி.கே.கலைவேந்தன் முன்னிலை வகித்தார்.

மேலும் நடைப்பெற்ற அச் செயல்வீரர்கள் கூட்டத்தில் மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் அகில இந்திய தலைவர்கள் பங்கு பெரும் நூற்றாண்டு விழா, மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக் குறித்த அக்கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். மேலும் அக்கூட்டத்தில் வார்டு திமுக செயலாளர்கள், பிரதிநிதிகள், நிர்வாகிகள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here