கும்பகோணம், ஏப். 13 –
நாளை ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
மேலும் இவ்விழாவினை ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு விழாவாக கொண்டாடி அவரது புகழுக்கு பெருமைச் சேர்த்திடும் வகையில், சிறப்பித்து வருகின்றது.
மேலும் அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் அவ்விழாவினை ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அதன் தொடர்ச்சியாக நாளை தஞ்சையில் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் பேரணி நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு இன்று கும்பகோணம் நீதிமன்றம் வளாகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சமத்துவ வழக்கறிஞரணி சார்பில் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த சட்டமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திரு உருவ படத்திற்கு வழக்கறிஞரணி மாநில துணைச் செயலாளர் தங்க ராவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் மேலும் அப்பகுதிவாழ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட அமைப்பாளர் தொல்குடி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராகவன், சிவராஜ், சரவணகுமார், முல்லைவளநாதன், முத்துராமன், அரச முதல்வன், நீலப்புலிகள் இயக்க தலைவர் இளங்கோவன், திராவிட கழகத் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நிம்மதி, வழக்கறிஞர்கள் கர்ணன், ஆனந்த், கார்த்திக், கென்னடி கண்ணன், மற்றும் வழக்கறிஞர்கள் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளிட்டவர்களும் மேலும் அப்பகுதியைச் சார்ந்த திரளான மொதுமக்களும் அவ்விழாவில் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.