கும்பகோணம், பிப். 24 –
கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னை ஆதிபராசக்தியானவள் அகில புவணங்களையும் படைத்து காத்து ரக்ஷப்பதற்காக எண்ணிலா நாமரூபங்கள் கொண்டு அருளாட்க்ஷி செய்து வருகின்றாள்.
மேலும் இவ்வாலயத்திற்கு வேண்டி வருபவர்களுக்கு வேண்டுவன அருளும், ஆதிப்பரா சக்தியாக இருந்து அன்னை பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக மிகுந்த நம்பிக்கையுடன் அப்பகுதி பக்தர்கள் அம்மனை வழிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்திருக்கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகப் திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று 23ம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று காலை 2 ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹதி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது
தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, புனித நீரை கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






















