கும்பகோணம், செப். 28 –
வெறிநாய் கடி நோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் ‘ரேபிஸ்‘) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநாய்கடி நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. அதன்படி, 16-வது உலக வெறிநாய் கடி நோய் தடுப்பு தினமான இன்று ‘ஒன் ஹெல்த் ஜீரோ டெத்’ என்ற கருத்தின் அடிப்படையில், அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
ரேபிஸ் நோய் இல்லா உலகை உருவாக்க அரசால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரேபிஸ் நோயால் ஏற்படும் மனித மற்றும் செல்லப் பிராணிகளின் உயிரிழப்புகளை தவிா்க்கவும், ரேபிஸ் நோய் வைரஸ் இல்லா உலகை உருவாக்கும் வகையிலும், உலக வெறிநோய் தடுப்புத் தினமான இன்று கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன், கால்நடை மருத்துவமனையில் டெல்டா இன்னர் வீல் கிளப் தலைவர் பிஸ்மில்லா பேகம் தலைமையில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் டெல்டா இன்னர் வீல் கிளப் செயலாளர் மணிமேகலை ராஜேந்திரன் துணைத் தலைவர் வச்சலா கருப்பண்ணன் துணைச் செயலாளர் லட்சுமி பிரபாகரன் பொருளாளர் இந்திராணி கிருஷ்ணன் இதழ் ஆசிரியர் சந்திரா, ஐஎஸ்ஓ ஜெயந்தி மற்றும் உறுப்பினர்கள் வைத்தியநாதன், பிரேமா, பாலு, மருத்துவ ஷெரின் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கால்நடை உதவி மருத்துவர்கள் கணேஷ், ரகுநாத், யாழினி, தேவி, தேவ பிரசன்னா, கால்நடை ஆய்வாளர் ரமேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பழனிவேல், மதியழகன், கற்பகம், ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பொதுமக்கள், தங்களது செல்லப் பிராணிகளை பாதுகாக்கவும், உயிரிழப்பை தவிா்க்கவும் கால்நடை நிலையங்களுக்கு வந்து வெறிநாய்க்கடி தடுப்பூசியை தங்களது செல்லப்பிராணிகளுக்கு செலுத்தி கொண்டனர்.






















