மீஞ்சூர், செப். 09 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு, திருப்பாலைவனம் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக திருப்பாலைவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழை நீர் சேகரிப்பு அமைவிடத்தை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரச் செடிகள் நட்டனர். பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு குறித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் யாஸ்மினிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சதாசிவம். மற்றும் ஜெயந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.ரவி, திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன், துணைத்தலைவர் சுகுணா கோபி, வார்டு உறுப்பினர்கள் நதியா ஹரி கிருஷ்ணன், ஊராட்சி செயலர் சௌந்தரராஜன், கிராம நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், செல்வம், அண்ணாதுரை, சமூகப் பணியாளர்கள் மஞ்சு, வீரம்மா மற்றும் பணி தல பொறுப்பாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.





















