பொன்னேரி, ஆக. 18 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டு கல்வி பயலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை வகித்தார். .நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மோகனா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணலி புதுநகர் மேல்நிலைப்பள்ளி, ஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளி, பெரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவெல்லைவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி ,ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழவேற்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, மெதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூர் சகாய மாதா மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட 13 பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் 2278 மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் முடிவில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.