குடவாசல், ஜூன். 24 –
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பாக குடவாசல் வட்ட கிளையில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கலில் 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க கோரி மூன்று கட்ட போராட்டமாக நடைபெறுகிறது.
அதில் இன்றைய போராட்டமாக மதிய உணவு இடைவேளையில் வட்டக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பொருளாளர் சிவக்குமார் தலைமையிலும், செயலாளர் ராஜாராமன் ஒன்றிய துணைத் தலைவர் செந்தில் மகளிர் அணி பொறுப்பாளர் கமலா விஜயலட்சுமி ரமணி ஆகியோர் முன்னிலையில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சமூக தணிக்கை இயக்கத்தின் கீழ் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கடந்த நவம்பர் 2021 முதல் ஊதியம் வழங்கப்படவில்லை வேறு நிதியிலிருந்து உடன் ஊதியம் வழங்க கோரியும், மற்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேட்டி: அமர்நாத் (மாவட்ட இணைச்செயலாளர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்)





















