கும்பகோணம், ஏப். 23 –
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஏறக்குறைய 18 ஆண்டு காலமாக புதிய வேளாண் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் 3.52 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். காய்கறி, கீரைகள், பழங்கள், சிறுதானியங்கள் என தோட்டக்கலைப் பயிர் செய்யும் ஏழை எளிய நடுத்தர விவசாயிகள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய் 22 ஆயிரம் வரை மின் கட்டணமாக செலுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், மேலும் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் மின் தடைகளை, மின் வெட்டுக்களை நீக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புனல்வாசல் சம்பந்தம் மற்றும் செம்மங்குடி சின்ன துரை தலைமையில் மோட்டார் பம்ப் செட் உபகரணங்களுடன் திரண்ட ஏராளமான விவசாயிகள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி : சுந்தரவிமல்நாதன், செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்






















