பொன்னேரி, ஏப். 19 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மெதூர் கிராமத்தில்  திமிறி எழு சிலம்பம் கலைக்கூடத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியின் வளாகத்தில் மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த நான்கு தினங்களாக நடைப்பற்றது.

அப் பயிற்சியினை மேற்கொள்ள வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவசமாக ஊட்டசத்து உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் அதற்கான நிறைவு விழா மற்றும் பயிற்சிகான சான்றுகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் நடபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமை பயிற்சியாளர் நிகேஷ் தலைமைவகித்தார். பொன்னேரி நகர துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் சமூக ஆர்வலர் சேலம் வளர்மதி .வார்டு உறுப்பினர் சதீஷ். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் .இதில் சிறப்பு அழைப்பாளராக இலயோலா கல்லூரியின் கலை இலக்கியப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் இரா. காளீஸ்வரன் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும். பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக பயிற்சி பெற்ற மாணவர்களின் சிலம்பக்கலை நிகழ்ச்சிகளும்  அனைவரது முன்னிலையிலும் அரங்கேற்றினர் இதில் திரளான  மாணவர்களும் மற்றும் கிராம பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here