புதுக்கோட்டை, ஏப். 17 –

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைப்பெற்றுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று திறந்து வைத்து உரை நிகழ்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமை வகித்தார். மேலும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்றுள்ள உசிலம்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை மற்றும் மேல்நிலைப்பட்டி ஊராட்சி, பூனையன் குடியிருப்பு கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் போன்றவற்றை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தமிழ்நாடு முழுவதும் நமது முதலமைச்சர் பல்வேறு வளர்ச்சி நலத்திட்டங்களை விரைவுப்படுத்தி செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இம்மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் திறந்து வைக்கப்படுகின்றது எனவும், மேலும் இந்த நலத்திட்டங்களை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, அமுதவள்ளி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here