பொன்னேரி, ஏப். 16 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் அருள்மிகு லஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கன்னியம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதை தொடர்ந்து மேளதாளம் முழங்க மஞ்சளாடை அணிந்து விரதமிருந்த பெண்கள் பால்குடமேந்தி ஊர்வலமாக வந்தனர்.
100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடமேந்தி வந்த இப்பால்குட ஊர்வலம் நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியே சுமார் 1கிமீ தூரம் பக்தர்கள் புடைசூழ சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து லஷ்மி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.





















