படவிளக்கம் கவரப்பேட்டையில், அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக நடைப்பெற்ற 2 வது நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு ஆர்பாட்டத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்

கும்மிடிப்பூண்டி, மார்ச் 30 –

கவரப்பேட்டையில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி இரண்டாம் வது நாளாக    அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தொமுச ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், இன்ஜினியரிங் சங்கத்தின் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சூரியபிரகாஷ், சீனு, தொமுச கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர்கள் மணிபாலன், இ.திருமலை, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜெ.அருள், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஐஎன்டியுசி மாவட்ட நிர்வாகி சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here