pic : file copy
கும்மிடிப்பூண்டி, பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் மேம்பாலம் அருகே திருவள்ளூர் மாவட்ட கனிம வளம் தடுப்புப்பிரிவு ஏடி பெருமாள்ராஜா கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக சட்டவிரோதமாக 8 யூனிட் மணலை கடத்திவந்த லாரியை மடக்கி ஓட்டுநரை விசாரிக்க முற்பட்டுள்ளார். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் 8 யூனிட் மணலுடன் லாரியை சாலையில் நிறுத்தி விட்டு தப்பிவோடியுளார். இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் மணலுடன் லாரியைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். இது தொடர்பாக தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















