கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சேலம் கொடிக்கம்பம் நடுவதில் பிரச்சனை எழுந்ததைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை நிர்வாகி மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் அதே இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், செப் . 24 –
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட ஓமலூர் அடுத்த கே.மோரூர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 17 ஆம் தேதி சேலம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இப்பகுதியில் கொடி ஏற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே அங்கு திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடி கம்பங்கள் இருக்கும் நிலையில் இடையூறு ஏற்படுவதால் இனி அப்பகுதியில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை நடுவதற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அறிவுறுத்தியதின் அடிப்படையில் அன்றைய தினம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் கே.மோரூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தடையை மீறி கொடிக்கம்பம் நடுவதற்கு முயற்சித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தடுத்துள்ளனர். அப்போது காவல் துறையினருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனுமதியை மீறி நடப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை காவல்துறையினர் பிடுங்கி எடுத்துச் சென்றனர்.
அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினரை கல் வீசி தாக்கியதால் அப்பகுதி போர்க்களமாக மாறியது அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தியதை கண்டித்து காந்தி பூங்கா முன்பு மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் விவேகானந்தன் செய்தி தொடர்பாளர் முருகதாஸ் மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழன் விவசாய அணி மாநிலச் செயலாளர் நாகப்பன் மாநில பொருளாளர் வெண்மணி ஒன்றிய செயலாளர் சசிகுமார் விடுதலை செல்வன் நகர செயலாளர் கலையரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.