ராமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலமையில் தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் பாசனதாரர் நலச்சங்களை சார்ந்த பிரதிநிதிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள நீநிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தினை மேம்படுத்திடும் நோக்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் ராநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக சம்மந்தப்பட்ட கண்மாய்களை சார்ந்த பாசனதாரர் விவசாயிகளை ஒருங்கிணைந்து பாசதனதாரர் நலச்சங்கம் அமைக்கப்பட்டு தற்போது பெரும்பான்மையான கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளன. இ்நநிலையில் விவசாய பிரதிநிதிகள் குடிமராமத்துபணிகளை மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருப்பது அவசியமாகும்.
அதனடிப்படையில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பின் மூலம் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து ஒரு நாள்பயி்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் புனரமைப்பு பணிகளின் போது கண்மாய் கரைகளை புனரமைத்தல், வலுப்புடுத்துதல் பாசன மதகுகளை சீரமைத்தல் மழைநீர் கலுங்குகளை பழுதுபார்த்தல், வரத்துக்கால்வாய் வழங்கு வாய்கால்களை புனரமைத்தல் போன்ற நேர்வுகளில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்ப நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியினை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், குடிமராமத்து பணிகள் துவங்கிய பின்பு பொதுப்பணி துறை சார்ந்த பொறியாளர்கள் மூலம் பணியின் தரம் குறித்து ஒவ்வொரு படிநிலையாக தர ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேபோல் குடிமராமத்து பணிகள் தொடர்பாக விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப தகவல்கள் அறிவுரைகள் அனை்தையும் வழங்கி பொதுப்பணித்துறை சார்ந்த அலுவலர்கள் உறுதுணையாக செயல்படவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தி் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 69 கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி தரமான முறையில் புனரமைப்பு பணிகளை சிறப்பாக நிறைவேற்று பாசனதாரர் நல சங்கத்தின் செயல்பாட்டினை அங்கீகரித்திடம் விதமாக பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப் படும்
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் வட்டக்குடி மற்றும் சம்பை ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய்களை பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட விவசாய பாசனதார நலச்சங்கதாரர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, தமிழ்நாடு நீர்வள ஆதார மேம்பாட்டு குழுமம் தலைவர் ராஜகோபால், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் (கீழ வைகை வடிநிலக்கோட்டம்) உட்பட பொதுப்பணித்துறை சார்ந்த அலுவலர்கள் விவசாய பசானதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.