பொன்னேரி, ஏப். 08 –

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்து வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் பொது கலந்தாய்வு முறையில் நடைபெறுவது வழக்கமாகும் அதன்படி இந்த ஆண்டு பணி மாற்றத்திற்காக கடந்த மூன்று நாட்களாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வந்து சென்றிருந்த நிலையில் கோட்டாட்சியர் இல்லாத காரணத்தினால் இந்தப் பிரச்சினைக்கு முடிவு பெறாமல் இருந்த நிலையில் இன்று கிராம நிர்வாக அலுவலர் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய இரு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here