திருவள்ளூர், மே. 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் பகுதியில் சென்னை ஹார்பரில் இருந்து இரும்பு மூலப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது லாரியின் முன் பக்க டயர் வெடித்ததில் லாரியில் தீ பற்றி எரிந்து நாசமாகி எலும்புக் கூடுபோல் காட்சியளித்தது.

சென்னை துறைமுகத்தில் இருந்து இரும்பு தாதுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை வழியாக புது கும்முடிபூண்டியில் உள்ள இரும்பு உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைக்கு சென்ற லாரி திடீரென முன்பக்க டயர் வெடித்ததில் அந்த லாரியில் தீப்பற்றி எரிந்து நாசமானது. மேலும் அதனை ஓட்டி வந்த லாரி ஓட்டுனர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரென தெரிய வந்துள்ளது. விபத்தின் தன்மையை உணர்ந்த அவர் லாரியை நிறுத்திவிட்டு லாவகமாக கீழேக் குதித்து உயிர் தப்பித்தார்.

மேலும் லாரியிலிருந்து இறங்கிய ஒரு சில நிமிடங்களில் டயரின் பின்புறம் உள்ள டீசல் டேங்கர் வெடித்து லாரி முழுவதும் தீப்பற்ற தொடங்கியது இதில் லாரியின் அனைத்து டயர்களும் தெரிந்து சேதமானது அதேபோல் லாரியின் முன்புறம் பின்புறம் என அனைத்து பகுதிகளும் மள மளவென தீப்பற்றி எரிய தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து ஓட்டுநர் உடனடியாக அவசர எண் 100 அழைத்து தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு நிலைய வீரர்கள் வர தாமதமானதால் லாரி முழுமையாக தீக்கு இரையானது. மேலும் அச்சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அருகாமையில் உள்ள கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு வராமல் வெகு தூரத்தில் உள்ள பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதமானதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதாக கூறும் வாகன ஓட்டிகள், தீயணைப்பு நிலைய வீரர்களின் சரியான புரிதல் இல்லாததாலேயே பல லட்ச ரூபாய் மதிப்பிலான லாரி முழுவதும் எரிந்து சேதமானதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here